தில்லி மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பிரதமர் திரு நரேந்திர மோடி, பாராட்டியுள்ளார்.
தில்லி மெட்ரோவில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய புள்ளிவிவரங்களை முந்தி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் சமூக ஊடக தளத்தில் தெரிவித்தார். பிப்ரவரி 10, 2020 இல், தில்லி மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 66,18,717 ஆகவும், ஆகஸ்ட் 28, 2023 அன்று இது 68,16,252 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதற்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“அருமையான செய்தி. நமது நகர்ப்புற மையங்களில் நவீன மற்றும் வசதியான பொது போக்குவரத்தை உறுதி செய்ய, நமது அரசு தொடர்ந்து செயல்படும்.”
***
ANU/SM/BR/KPG
Wonderful news. Our Government will continue working to ensure our urban centres have modern and comfortable public transport. https://t.co/fe6fXPwhGR
— Narendra Modi (@narendramodi) September 1, 2023