கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான திரு. கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸில் சந்தித்தார்.
திரு. கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பையும், இந்திய இசை மற்றும் நடனத்தின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் பாராட்டினார். 27.11. 2022 அன்று தமது மனதின் குரல் வானொலி உரையின் 95-வது நிகழ்ச்சியின் போது பிரதமர் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
கிரேக்கத்தில் இந்தியக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது அவர்கள் விவாதித்தனர்.
******
ANU/AP/PLM/DL
Konstantinos Kalaitzis loves India, particularly Indian music and culture. This passion is also shared by his family. This small video gives a glimpse of it. pic.twitter.com/hoJARzhjcj
— Narendra Modi (@narendramodi) August 25, 2023