Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜன்தன் கணக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்


ஜன்தன் கணக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது.

 

இந்தக் கணக்குகளில் பாதிக்கும் அதிகமானவை நமது மகளிர் சக்திக்கு சொந்தமானவை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திரு மோடி கூறினார்.

 

பிஐபி இந்தியாவின் ட்விட்டருக்குப் பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

“இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.

இவற்றில் பாதிக்கும் அதிகமான கணக்குகள் நமது மகளிர் சக்திக்கு சொந்தமானவை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் 67% கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பயன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

******

ANU/AP/SMB/DL