Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் சமூகப் பொருளாதாரத்தில் கூட்டுறவு ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும் என்றார்


கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், அவற்றை நவீனப்படுத்தவும், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அலகை வலுப்படுத்தவும் தனி கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

கூட்டுறவு அமைச்சகம் நாட்டில் கூட்டுறவு வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது, இது மிகவும் ஏழ்மையான நபர்களின் குரல்கள் கூட கேட்கப்படுவதையும், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது.

வெளியிடப்பட்டது: 15 ஆகஸ்ட் 2023 1:59 பிற்பகல் பிஐபி டெல்லி

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் சமூகப் பொருளாதாரத்தில் கூட்டுறவு ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், அவற்றை நவீனப்படுத்தவும், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அலகை வலுப்படுத்தவும் தனி கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கூட்டுறவு அமைச்சகம் நாட்டில் கூட்டுறவு வலையமைப்பை விரிவுபடுத்தி வருவதாகவும், மிகவும் ஏழ்மையான நபர்களின் குரல்கள் கூட கேட்கப்படுவதையும், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது என்று பிரதமர் கூறினார். “சாகர் சே சம்ரிதிஎன்ற பாதையை இந்தியா தேர்வு செய்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

***

PKV/KRS