லோகமான்ய திலகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம், போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கதை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பூர்ண சுயராஜ்யக் கோரிக்கையுடன் அந்நிய ஆட்சியின் அடித்தளத்தை உலுக்கிய நாட்டின் அழியாத போராளி லோகமான்ய திலகரின் பிறந்தநாளில் அன்னாரை நான் தலை வணங்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம், போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய கதை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
***
MS/BR/DL
पूर्ण स्वराज की मांग से विदेशी हुकूमत की नींव हिलाने वाले देश के अमर सेनानी लोकमान्य तिलक को उनकी जन्म-जयंती पर कोटि-कोटि नमन। आजादी के आंदोलन में उनके साहस, संघर्ष और समर्पण की कहानी देशवासियों को सदा प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 23, 2023