Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபிரான்ஸ் பிரதமரை சந்தித்துப் பேசினார், பிரதமர் திரு நரேந்திர மோடி

ஃபிரான்ஸ் பிரதமரை சந்தித்துப் பேசினார், பிரதமர் திரு நரேந்திர மோடி


ஃபிரான்ஸ் பிரதமர் மேதகு திருமிகு எலிசபெத் போர்னை ஜூலை 13, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரிசக்தி, சுற்றுச்சூழல், கல்வி, இயக்கம், ரயில்வே, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, அருங்காட்சியியல், மக்களிடையேயான உறவு போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது பற்றி தலைவர்கள் ஆலோசித்தனர்.

இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே உள்ள பல அம்ச  ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும் தங்களது விருப்பத்தை இரு தரப்பினரும் முன்வைத்தனர்.

***