Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரான்ஸ் அதிபருக்கான ராஜ்ஜிய உறவுகள் ஆலோசகர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்

பிரான்ஸ் அதிபருக்கான ராஜ்ஜிய உறவுகள் ஆலோசகர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்


பிரான்ஸ் அதிபருக்கான ராஜ்ஜிய உறவுகள் ஆலோசகர் திரு இமானுவேல் போனே இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பின் செயலாக்கம் குறித்து திரு போனோ பிரதமருக்கு விளக்கினார்.

ஜூலை 14 அன்று பேஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராக பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ள அதிபர் மேக்ரோனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஹிரோஷிமாவில் அதிபர் மேக்ரோனை தாம் சந்தித்து பேசியதை நினைவுகூர்ந்த பிரதமர், பிரான்சில் தங்களுடைய பேச்சை தொடர்ந்து மேற்கொள்ள தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் இது இந்தியா-பிரான்ஸ் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.  

***

AP/IR/AG/RJ