Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊழல், பயங்கரவாதம், கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் யாகத்தில் முழுமனத்துடன் பங்கேற்றுள்ள மக்களை வணங்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.


ஊழல், பயங்கரவாதம், கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் யாகத்தில் முழுமனத்துடன் பங்கேற்றுள்ள மக்களை வணங்குவதாக பிரதமர் கூறியுள்ளார். உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் நன்மைகளை விளக்கி பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் பொருளாதார பரிவர்த்தனைகளில் ரொக்கமில்லா செலுத்துகை மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தை மக்கள் அதிக அளவில் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஊழல், பயங்கரவாதம், கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் யாகத்தில் முழுமனத்துடன் பங்கேற்றுள்ள மக்களை நான் வணங்குகிறேன்.
அரசின் இந்த முடிவு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் போன்ற நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளோருக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
அரசின் இந்த நடவடிக்கை பல அசவ்கரியங்களைக் கொண்டுவரும் என்று நான் சொல்லி வந்துள்ளேன், ஆனால் இந்த குறுகியகால வலி நீண்டகால லாவங்களுக்கு வழிவகுக்கும்.
இந்திய கிராமப்புற முன்னேற்றமும் வளமும் இனிமேல் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தால் பாதிக்கப்பட மாட்டாது. நமது கிராம மக்கள் தங்களுக்கு உரியவற்றைக் கட்டாயம் பெற வேண்டும்.

நமது பொருளாதார பரிமாற்றங்களில் ரொக்கமில்லா செலுத்துகைகள், அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க கூடுதலான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை பெற்றுள்ளோம்.

எனது இளம் நண்பர்களே நீங்கள் மாற்றத்தின் முகவர்கள். நீங்கள் இந்தியாவை ஊழலற்றதாக மாற்றுவீர்கள். ரொக்கமில்லா பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதி செயவீர்கள்.
நாம் ஒருங்கிணைந்து இந்தியா கருப்புப் பணத்தை தோற்கடித்துவிட்டது என்ற நிலையை உருவாக்குவோம். இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், புதிதாக உருவாகியுள்ள நடுத்தர மக்கள் ஆகியோரும் எதிர்காலச் சந்ததியினரும் அதிகாரம் பெறுவர்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.