நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக ஜனநாயகத்தின் இருண்ட நாட்கள் அமைந்திருந்தன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாகவது:
“அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் (#DarkDaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது.”
இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
***
AD/PLM/DL
I pay homage to all those courageous people who resisted the Emergency and worked to strengthen our democratic spirit. The #DarkDaysOfEmergency remain an unforgettable period in our history, totally opposite to the values our Constitution celebrates.
— Narendra Modi (@narendramodi) June 25, 2023