Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி20 கல்வி அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் உரை

ஜி20 கல்வி அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் உரை


புனேவில் இன்று (2023, ஜூன் 22) நடைபெற்ற ஜி20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ காட்சி மூலம் உரையாற்றினார்.  

அப்போது பேசிய அவர், கல்வி என்பது நமது நாகரிகத்தைக் கட்டமைத்த அடித்தளம் மட்டுமல்ல, அது எதிர்கால மனித சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாகவும் உள்ளது என்று தெரிவித்தார். கல்வித்துறை அமைச்சர்களை ஒருங்கிணைப்பாளர்கள் என்று குறிப்பிட்டப் பிரதமர், அனைவருக்குமான வளர்ச்சி, அமைதி, செழுமைக்கான முயற்சியில் அவர்கள் முன்னணி வகிப்பதாகக் கூறினார். கல்வியின் பங்களிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் கருவியாக திகழ்கிறது என்று இந்திய வேதங்கள் கூறுவதாக திரு மோடி குறிப்பிட்டார். உண்மையான அறிவு பணிவையும், பணிவிலிருந்து மதிப்பையும், மதிப்பில் இருந்து செல்வத்தையும் தருகிறதுசெல்வம் ஒருவருக்கு நற்செயல்களைச் செய்ய உதவுகிறது, அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது என்ற சமஸ்கிருத வரிகளை அவர் வாசித்தார். ஒட்டுமொத்த மற்றும் விரிவான பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். அடிப்படை எழுத்தறிவு முறைகள் இளைஞர்களுக்கான வலுவான அடித்தளமாக இருப்பதாகவும், இதனை இந்திய தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதாகவும் அவர் தெரிவித்தார். புரிதலுடன் படிப்பதில் புலமை மற்றும் எண்ணறிவு திறமைக்கான தேசிய முன்னெடுப்பு அல்லது அரசின் நிபுன் பாரத் முன்னெடுப்பு குறித்து அவர் குறிப்பிட்டார். ஜி20-ன் முன்னுரிமையாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறமை கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். இது குறித்து 2030-ம் ஆண்டுக்குள் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய இணையதள வாயிலான கற்பித்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர், சிறந்த நிர்வாகத்துடன் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது நோக்கமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். முன்னேற விரும்புவோரின் செயல்பாட்டுடன் கூடிய கற்றலுக்கான  கற்றல் வலையங்கள் (ஆக்டிவ் லர்னிங்  அல்லது யங் அஸ்பைரிங் மைன்ட்ஸ்  அல்லது ஸ்வயம்) இணையதளங்கள் மூலம் ஒன்பதாம் வகுப்பு பாடம் முதல் முதுநிலைப் படிப்பு வரை கற்பிக்கப்படுகிறது.  எளிதான, சமமான  மற்றும் தரமான முறையில் மாணவர்கள்  கற்றுக்கொள்ள முடிகிறது என்று அவர் கூறினார். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடங்கள் மற்றும் 34 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள்  பதிவு ஆகியவற்றுடன் இது மிகவும் திறன்வாய்ந்த  கற்பிக்கும் வருவியாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அறிவுச் பகிர்வுக்கான  டிஜிட்டல் கட்டமைப்பு அல்லது திக்ஷா இணையதளம்  வாயிலாக  தொலைதூர பள்ளிக்கல்வி  கற்பிக்கப்படுகிறது. இது 29 இந்திய மொழிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள உதவுவதாகவும், 137 மில்லியனுக்கும் மேற்பட்ட பாடங்கள் இதுவரை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அனுபவங்களையும்,  ஆதாரங்களையும் மற்ற நாடுகளுடன் குறிப்பாக, உலகின் தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டார்.

நமது இளையோரை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த, நாம் தொடர்ந்து அவர்களுக்கு திறன், மறுதிறன் மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  அவர்களுடைய பணி அனுபவங்கள் மற்றும் பயிற்சிகளுடன் திறமைகளை வகைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்த முன்னெடுப்புடன்  கல்வி, திறன் மற்றும் தொழிலாளர் நல அமைச்சகங்கள் மூலம் திறன் வரைபடத்தை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் திறன் வரைபடத்தை ஜி20 நாடுகள் உருவாக்க முடியும் என்றும், அதில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்றும் திரு மோடி கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் சமநிலை தன்மையாக  செயலாற்றி வருவதாக  அனைத்து உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 

டிஜிட்டல் தொழில்நுட்பம் சமநிலைப்படுத்துவதில் பங்களிப்பதாகவும், உள்ளடக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் கூறினார். கல்வியை அணுகுவதில் பன்னோக்கு சக்தியாக  திகழ்ந்து எதிர்காலத் தேவைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவின் திறன் குறித்துக் குறிப்பிட்ட அவர், கற்பித்தல், திறன் மற்றும் கல்வித்துறைகளில் இதற்கு சிறந்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.  தொழில்நுட்பம் மூலம் எழும் வாய்ப்புகள், சவால்களுக்கிடையே சரியான சமநிலையை பராமரிக்க வேண்டியதில் ஜி20 நாடுகளின் பங்களிப்புக் குறித்து அவர் வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளின் எழுச்சிக் குறித்து குறிப்பிட்டப் பிரதமர், நாடு முழுவதும் 10 ஆயிரம் அடல் மேம்படுத்தும் ஆய்வகங்களை இந்தியா அமைத்துள்ளதாகவும், இது  நமது பள்ளிக்குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புத் தளங்களாக திகழ்கிறது என்று அவர் கூறினார்.  இந்த ஆய்வகங்களில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புத் திட்டங்களில் 7.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதில்  குறிப்பாக, உலகின் தென்பகுதி நாடுகளுக்கு ஜி20 நாடுகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதிகரிக்கப்பட்ட ஆராய்ச்சி  ஒருங்கிணைப்பிற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நமது குழந்தைகள் மற்றும் இளையோரின் எதிர்காலத்தையொட்டி நடைபெறும் ஜி20 கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் மகத்துவம் குறித்து குறிப்பிட்டப் பிரதமர், நீடித்த வளர்ச்சிக்கான நோக்கங்களை அடைவதற்கு உந்து சக்தியாக பசுமை மாற்றம், டிஜிட்டல் மாற்றங்கள், மகளிரின் அதிகாரம் ஆகியவற்றை  கண்டறிந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.  இந்த அனைத்து முயற்சிகளுக்கும் ஆணி வேராக கல்வி அமைந்துள்ளதாகவும், இந்தக் கூட்டம் அனைத்தையும் உள்ளடக்கிய, நடைமுறை சார்ந்த, எதிர்காலக் கல்வித்திட்டம் ஆகியவற்றை கொண்டதாக அமையும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.  இது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று பொருள்படும் வகையிலான வசுதைவ குடும்பகம் என்ற உண்மையான உத்வேகத்தில் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

***

(Release ID: 1934350)

LK/IR/RS/KRS