Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு காரி ஈ. டிக்கர்சன் உடன் பிரதமர் சந்திப்பு

அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு காரி ஈ. டிக்கர்சன் உடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி-யில் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
திரு காரி ஈ. டிக்கர்சனை சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் குறைக்கடத்தி சூழலியலை வலுப்படுத்துவதில் பங்களிப்பை வழங்குமாறு அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் செயல்முறை தொழில்நுட்பம் மற்றும் உயர்தர பேக்கேஜிங் திறன்களை மேம்படுத்துவதற்கும் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்காக இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுவதன் சாத்திய கூறுகள் குறித்தும் பிரதமரும், திரு டிக்கர்சனும் ஆலோசனை நடத்தினார்கள்.

***

(Release ID: 1934299)

LK/BR/KRS