Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க பொருளாதார நிபுணரும், கொள்கை தொழில் முனைவோருமான பேராசிரியர் பால் ரோமருடன் பிரதமரின் சந்திப்பு

அமெரிக்க பொருளாதார நிபுணரும், கொள்கை தொழில் முனைவோருமான பேராசிரியர் பால் ரோமருடன்  பிரதமரின் சந்திப்பு


நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்க பொருளாதார நிபுணரும், கொள்கை தொழில் முனைவோருமான பேராசிரியர் பால் ரோமரை,  பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று சந்தித்துப் பேசினார்.

 

ஆதார் பயன்பாடு, டிஜிலாக்கர் போன்ற புதுமைக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட இந்தியாவின் டிஜிட்டல் பயணம் குறித்து பிரதமரும், பேராசிரியர் ரோமரும் விவாதித்தனர். நகர்ப்புற வளர்ச்சிக்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

***

(Release ID: 1933809)

SM/IR/KPG/KRS