Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த நடிகை சுலோச்சனாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


மூத்த நடிகை சுலோச்சனாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது படைப்புகளின் வாயிலாக அன்னாரது திரையுலக மாண்பு என்றும் நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய திரைப்பட உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. நினைவை விட்டு அகலாத அவரது படைப்புகள், நமது கலாச்சாரத்திற்கு வளமை சேர்த்திருப்பதோடு, தலைமுறைகள் கடந்தும் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. அவரது படைப்புகளின் வாயிலாக சுலோச்சனாவின் திரையுலக மாண்பு என்றும் நிலைத்து நிற்கும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

(Release ID: 1929806)

AD/BR/RK