தம் மீது மக்கள் காட்டும் அளவற்ற அன்புக்கும், பாசத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோதி நன்றியை வெளிப்படுத்தி உள்ளார். மூன்று நாடுகள் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் தாயகம் திரும்பிய போது மக்கள் அளித்த உற்சாக வரவேற்புக் குறித்து செய்தி வாசிப்பாளர் திருமதி ரூபிகா லியாகத், வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் நம்பிக்கையும் தான் என்னுள் புதிய ஆற்றலை நிரப்பி ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு தூண்டுகிறது.”
******
AD/PLM/MA/KPG
ये करोड़ों देशवासियों का प्रेम और विश्वास ही है, जो मुझे नई ऊर्जा से भर देता है और हर पल देश सेवा के लिए प्रेरित करता है। https://t.co/twvuQ2yhh0
— Narendra Modi (@narendramodi) May 25, 2023