Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிடல் காஸ்ட்ரோ மறைவு – பிரதமர் இரங்கல்


கியூபா நாட்டின் தலைவர் திரு. பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

இந்த துயரமான நேரத்தில், கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்.

20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மனிதர்களில், பிடல் காஸ்ட்ரோவும் ஒருவர். இந்தியா தனது சிறந்த நண்பனை இழந்து தவிக்கிறது” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.