ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் மே 23, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.
பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஃபார்டெஸ்க் குழுமத்தின் திட்டத்திற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை வலியுறுத்தி, பசுமை ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்முயற்சிகளும், மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்களையும் இந்தியா எடுத்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பிரதமரிடம் டாக்டர் ஃபாரஸ்ட் விளக்கினார்.
******
(Release ID: 1926486)
AP/BR/KRS
In Sydney, PM @narendramodi met Dr. Andrew Forrest, the Executive Chairman of @FortescueFuture Industries. He spoke about the economic opportunities in India and the reforms undertaken which make the country an attractive investment destination. pic.twitter.com/AwmQZqAVMV
— PMO India (@PMOIndia) May 23, 2023