மேன்மைதங்கியவர்களே‘!
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
நமது விவாதங்களில் இருந்து உருவான கருத்துக்களை நிச்சயமாக நாம் பரிசீலிப்போம். நாம் பகிரப்பட்ட சில முன்னுரிமைகளையும், பசிஃபிக் தீவு நாடுகளின் தேவைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பில் நமது முயற்சி என்பது இந்த இரண்டு அம்சங்களை மனதில் கொண்டு முன்னேறுவதாகும். ஃபிப்பிக் அமைப்பிற்குள் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க அறிவிப்புகளை வெளியிட நான் விரும்புகிறேன்.
பசிஃபிக் தீவு நாடுகளின் பகுதிக்கு இந்த ஆண்டு பப்புவா நியூ கினியாவில் ஜெய்ப்பூர் பாத முகாமை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். 2024 தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பசிஃபிக் தீவு நாடுகளில் இத்தகைய இரண்டு முகாம்கள் நடத்தப்படும்.
மேன்மை தங்கியவர்களே,
இத்துடன் எனது கருத்துக்களை நான் நிறைவு செய்கிறேன். இந்த அமைப்புடன் சிறப்பான உறவை நான் கொண்டிருக்கிறேன். இது எல்லைகளைக் கடந்ததாக இருக்கிறது. மனிதகுல ஒத்துழைப்பின் எல்லையற்ற ஆற்றலை அங்கீகரிக்கிறது. இன்று இங்கு நீங்கள் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றியை நான் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்தமுறை உங்களை இந்தியாவில் வரவேற்கும் வாய்ப்பை நாம் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.
நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
******
(Release ID: 1926273)
AD/SMB/AG/KRS