Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன்  சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே  இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து,  அவர்களது இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

மார்ச் மாதம்  தம்மால் பரிசாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுகளை ஹிரோஷிமாவில் நட்டதற்காக ஜப்பான் பிரதமர் கிஷிடாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா தினத்தை நினைவு கூர்ந்து வருதை சுட்டிக்காட்டிய  பிரதமர், ஜப்பானிய தூதர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று வருவதையும் குறிப்பிட்டார்.

ஜி-20 மற்றும் ஜி-7 தலைமைத்துவத்தின்  முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகளைப் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

சமகால பிராந்திய வளர்ச்சிகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இருதரப்பு சிறப்பு உத்திபூர்வ, உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.  இரு தலைவர்களின் விவாதத்தில், கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுலா, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE), பசுமை ஹைட்ரஜன், உயர் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டன. பயங்கரவாதத்தை ஒழிப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

***

AD/PKV/DL