Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தானின் அபு சாலையில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ராஜஸ்தானின் அபு சாலையில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


ஓம் சாந்தி!

அது நவீன மருத்துவமனைக்கு இன்று இங்கு அடித்தல் நாட்டப்பட்டுள்ளது. சிவமணி இல்லம் மற்றும் செவிலியர் கல்லூரியின் விரிவாக்கப் பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய முன்முயற்சிகளுக்காக பிரம்ம குமாரிகள் அமைப்பிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். விடுதலையின் ‘அமிர்தகாலம்’, இந்தியாவின் சமூக மற்றும் ஆன்மீக அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் தங்கள் கடமையை 100% நிறைவேற்ற வேண்டிய காலகட்டம், இது.

நண்பர்களே,

இன்று நமது ஒட்டுமொத்த நாட்டிலும் சுகாதார வசதிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் முதன்முறையாக ஏழை எளியவர்களும் சுலபமாக மருத்துவமனைகளை அணுகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய பங்காற்றியுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம், அரசு மருத்துவமனைகளுடன், தனியார் மருத்துவமனைகளின் கதவுகளையும் ஏழைகளுக்காக திறந்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 4 கோடி ஏழைகள் பயனடைந்துள்ளனர்.

மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்களுள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை பிரச்சனையும் ஒன்று. இதனை சரி செய்வதற்காக கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளில் சராசரியாக மாதந்தோறும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 2014- க்கு முன்பு, 150க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளே கட்டப்பட்டிருந்தன. கடந்த 9 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

பல ஆயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் ஆன்மீக அமைப்புகள் கல்வி முதல் ஏழைகளுக்கு சேவையாற்றுவது வரை அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் யோகா முகாம்களை நடத்தியும், விடுதலையின் அமிர்த பெருவிழா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தும், நாடு முழுவதும் ஏராளமானோரை நீங்கள் ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது முன்முயற்சிகளால் பிரம்ம குமாரிகள் அமைப்பு மீதான எனது நம்பிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. ‘ஸ்ரீ அன்னா’ என்று அழைக்கப்படும் சிறு தானியங்களை சர்வதேச அளவில் இந்தியா தற்போது ஊக்குவித்து வருகிறது. இயற்கை விவசாயம், தூய்மையான ஆறுகள் போன்ற பிரச்சாரங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். தேச கட்டமைப்புடன் தொடர்புடைய புதிய விஷயங்களை புதுமையான வழியில் பிரம்ம குமாரிகள் அமைப்பு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

AD/BR/RK