Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்டியல் வகுப்பினருக்கான தேசிய மையம் திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் பாராட்டு


பட்டியல் வகுப்பினருக்கான  தேசிய மையம் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருப்பதற்கு பிரதமர் பாராட்டு  தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே-யின் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் பலப்படுத்துவதற்காக, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வலிமைப்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

வாழ்த்துகள்! சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பிரிவுக்கு அதிகாரம் அளித்தல் என்பது  சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் அதிகாரம் அளிப்பதாகும். பட்டியல் வகுப்பினருக்கான தேசிய மையம் திட்டத்தின் வெற்றி ஊக்கமளிக்கிறது.

***

AD/ES/AG/KPG