Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக நாடு முழுவதும் மின்சார வாகனங்களை தற்போது பார்க்க முடிகிறது: பிரதமர்


மின்சார வாகனங்களை பிரபலமடையச் செய்ய மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக நாடு முழுவதும் மின்சார வாகனங்களை தற்போது பார்க்க முடிகிறது என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  ‘கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் குறைத்தல்’ என்ற தொலைநோக்குப் பார்வை என்ற அடிப்படையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாட்டில் அபரிமிதமாக  அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் தெரிவித்திருப்பதாவது:

“மிகவும் உத்வேகம் அளிக்கும் தகவல்! மின்சார வாகனங்களை பிரபலமடையச் செய்ய மத்திய அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பயனாக தற்போது நாடு முழுவதும் மின்சார வாகனங்களைக் காணமுடிகிறது.

***

(Release ID: 1917865)

AP/ES/RS/KRS