அசாமின் கவுகாத்தியில் உள்ள சருசாஜெய் விளையாட்டு அரங்கத்தில் ரூ .1௦,9௦௦ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் பலாசபரி மற்றும் சுயல்குச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்படும் பாலம், சிவசாகரில் உள்ள ரங் கார் அழகுபடுத்தும் திட்டம், நம்ரப்பில் உள்ள மென்தால் உற்பத்தி மையம், நிறைவடைந்த ஐந்து ரயில்வே திட்டங்களை நாட்டு அர்பணித்தல் ஆகியவைகள் அடங்கும். மேலும் பாரம்பரிய பிஹு நடனக்கலைஞர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், இன்றைய சிறந்த அற்புதமான நிகழ்வை கண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் இதனை மறக்க முடியாது. இந்த நிகழ்வின் சிறப்பான அதிர்வுகள் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்திருக்கும் என்றார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் அசாமை சேர்ந்த கலைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் அறிந்து இருப்பர் என்று கூறிய பிரதமர், அவர்களின் உணர்வுகளையும், உற்சாகத்தையும் நான் பாராட்டுகிறேன் என்றார். இதற்கு முன்னர் நான் விதான் சபா தேர்தலின் போது அசாம் வந்தேன். அப்போது அசாம் மாநிலமே முன்னிலை பெற்று வருகிறது என்று மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பியதை நான் இங்கு நினைவு கூர்கிறேன் என்றார். அசாம் மாநில மக்களுக்கும், அனைவர்க்கும் பிஹு (அசாம் புத்தாண்டு தினம்) வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாபில் பைசாகி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மக்கள் பொய்லா பைஷாக் என்றும், கேரள மக்கள் விஷு என்றும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற குறிக்கோளை வலியுறுத்தும் விதமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இவை இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் முயற்சிக்கு செயல்பட உத்வேகம் அளிக்கும் என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை, மூன்று மருத்துவக்கல்லூரிகள், ரயில்வே திட்டங்கள், பிரம்மபுத்ரா நதியின் மீது பாலம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன் என்றார்.
அசாம் மாநில மக்களின் கலாச்சாரத்தை மதிக்கும் மாண்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், நமது திருவிழாக்கள் அனைத்தும் கலாச்சார அடிப்படையில் அமையப்பட்டு இருந்தாலும், அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது என்றார். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றிணைப்பதே இந்தியாவின் கலாச்சார பெருமையாகும். நம் நாடு அடிமைத்தனத்தில் சிக்கித்தவித்த போது ஒரே தேசமாக ஒன்றிணைந்து வலிமையாக திகழ்ந்தது என்றார்.
பிரபல எழுத்தாளரும், சினிமா பிரபலமுமான ஜோதி பிரசாத் அகர்வாலாவின் பிஸ்வா பிஜோய் நௌஜவான்‘ பாடலில் இருந்து சில வரிகளை மேற்கோள்காட்டிய பிரதமர், இந்த பாடல், அசாம் மாநில இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார்.
****
SRI/GS/SG/DL
Delighted to be among the wonderful people of Assam on the special occasion of Bihu. Grateful for the affection. https://t.co/L6KFIvwGbo
— Narendra Modi (@narendramodi) April 14, 2023
बीहू को सिर्फ शाब्दिक अर्थ से नहीं समझा जा सकता।
— PMO India (@PMOIndia) April 14, 2023
बल्कि इसे समझने के लिए भावनाओं की, ऐहसास की आवश्यकता होती है। pic.twitter.com/UiRMl1rdsW
भारत की विशेषता ही यही है, कि हमारी संस्कृति, हमारी परंपराएं हज़ारों-हज़ार वर्षों से हर भारतवासी को जोड़ती आई हैं। pic.twitter.com/yISbOsluDG
— PMO India (@PMOIndia) April 14, 2023
आज भारत आजाद है और आज विकसित भारत का निर्माण, हम सभी का सबसे बड़ा सपना है।
— PMO India (@PMOIndia) April 14, 2023
हमें देश के लिए जीने का सौभाग्य मिला है। pic.twitter.com/bMajpvGHvy
आज हमारे लिए कनेक्टिविटी, चार दिशाओ में एक साथ काम करने वाला महायज्ञ है। pic.twitter.com/fH4TA5YfYZ
— PMO India (@PMOIndia) April 14, 2023
नॉर्थ ईस्ट में अविश्वास का माहौल दूर हो रहा है, दिलों की दूरी मिट रही है। pic.twitter.com/SVhoyqNIyS
— PMO India (@PMOIndia) April 14, 2023