Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாட்டில் சேலம் ரயில்வே சந்திப்பில் வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி


தமிழ்நாட்டில் சேலம் ரயில்வே சந்திப்பில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலுக்கு மக்கள் அளித்த அற்புதமான வரவேற்பு குறித்து பிரதமர்
திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சேலம் ரயில்வே சந்திப்பில் வந்தே பாரத் விரைவு ரயிலை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ரயில் மீது மலர் மாரி பொழிந்தனர்.

தமிழ்நாடு பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“சேலத்தில் அற்புதமான வரவேற்பு!

வந்தே பாரத் விரைவு ரயில் செல்லும் பல்வேறு இடங்களில் இத்தகைய உற்சாகம் பொதுவாக காணப்படுகிறது, இது இந்திய மக்களிடையே காணப்படும் பெருமிதத்தைக் காட்டுகிறது.”

***

AD/PKV/AG/RR