வணக்கம்
மரியாதைக்குரிய நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான நண்பர்களே!
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு வரவேற்கிறோம்! முதலாவதாக, பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டின் 5வது கூட்டம், ICDRI-2023, நடைபெறுவது உண்மையில் ஒரு சிறப்பான ஒன்றாகும்.
நண்பர்களே,
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாடு (CDRI) உலகளாவிய பார்வையில் இருந்து எழுந்தது. நெருக்கமாக இணைக்கப்பட்ட உலகில், பேரழிவுகளின் தாக்கம் உள்ளூர் மட்டுமல்ல ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பேரழிவுகள் முற்றிலும் வேறுபட்ட பிராந்தியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நமது சிந்தனை தனிமைப்படுத்துவதில் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படுவதில் இருக்க வேண்டும்.
நண்பர்களே,
ஒரு சில ஆண்டுகளில், 40 நாடுகள் பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்பின்(CDRI) அங்கமாக மாறியுள்ளன. இந்த மாநாடு ஒரு முக்கியத் தளமாக மாறி வருகிறது. மேம்பட்ட பொருளாதாரங்கள் மற்றும் வளரும் பொருளாதாரங்கள் பெரிய மற்றும் சிறிய நாடுகள், வடக்கு மற்றும் தெற்கு நாடுகளும் இந்த மன்றத்தில் ஒன்றாக வருகின்றன. இதில் அரசுகள் மட்டும் ஈடுபடவில்லை உலகளாவிய நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் தனியார் துறையும் இதில் பங்கு வகிக்கின்றன என்பதும் ஊக்கமளிக்கிறது.
நண்பர்களே,
உள்கட்டமைப்பு பற்றி விவாதிக்கும்போது, சில முன்னுரிமைகளை நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு மாநாட்டிற்கான (CDRI) கருப்பொருள் மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய உள்கட்டமைப்பை வழங்குவது தொடர்பானது. உள்கட்டமைப்பு என்பது வருவாயைப் பற்றியது மட்டுமல்ல, சென்றடைதல் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றைப் பற்றியது. நெருக்கடியான காலத்திலும் உள்கட்டமைப்புகள் யாரையும் விட்டுவிடாமல் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். மேலும், உள்கட்டமைப்பு பற்றிய முழுமையான பார்வை தேவை. போக்குவரத்து உள்கட்டமைப்பைப் போலவே சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பும் முக்கியம்.
நண்பர்களே,
பேரிடர்களின் போது, துன்பப்படுபவர்களை நோக்கி நம் இதயம் செல்வது இயற்கையே. நிவாரணம் மற்றும் மீட்பு முன்னுரிமை பெறுவதே சரியானது. பேரிடர் தடுப்பு என்பது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை எவ்வளவு விரைவாக அதற்கான அமைப்புகள் உறுதி செய்ய முடியும் என்பது பற்றியது. ஒரு பேரழிவிற்கும் இன்னொரு பேரழிவிற்கும் இடைப்பட்ட காலங்களில் இது கட்டமைக்கப்படுகிறது. கடந்த கால பேரழிவுகளைப் படிப்பதும், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதும்தான் வழி. இங்குதான் பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்பு (சி.டி.ஆர்.ஐ) மற்றும் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு தேசமும் பிராந்தியமும் பல்வேறு வகையான பேரழிவுகளை எதிர்கொள்கின்றன. பேரழிவுகளைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு தொடர்பான உள்ளூர் அறிவை சமூகங்கள் உருவாக்குகின்றன. உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் அதே வேளையில், அத்தகைய அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் நுண்ணறிவுகளுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பம் நெகிழ்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும். மேலும், நன்கு ஆவணப்படுத்தப்பட்டால், உள்ளூர் அறிவு உலகளாவிய சிறந்த நடைமுறையாக மாறும்.
நண்பர்களே,
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்பின் (CDRI) சில முயற்சிகள் ஏற்கனவே அதன் உள்ளடக்கிய நோக்கத்தைக் காட்டுகின்றன. தாங்கக்கூடிய தீவு மாநிலங்களுக்கான உள்கட்டமைப்பு அல்லது ஐஆர்ஐஎஸ் பல தீவு நாடுகளுக்கு பயனளிக்கிறது. இந்தத் தீவுகள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதில் வாழும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு முக்கியம். கடந்த ஆண்டு தான், உள்கட்டமைப்பு விரைவு படுத்துவதற்கான நிதி அறிவிக்கப்பட்டது. இந்த 50 மில்லியன் டாலர் நிதி வளரும் நாடுகளிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. நிதி ஆதாரங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு முக்கியமாகும்.
நண்பர்களே,
சமீபத்திய பேரழிவுகள் நாம் எதிர்கொள்ளும் சவால்களின் அளவை நினைவூட்டுகின்றன. சில உதாரணங்களைத் தருகிறேன். இந்தியா மற்றும் ஐரோப்பா முழுவதும் வெப்ப அலைகள் இருந்தன. பல தீவு நாடுகள் பூகம்பங்கள், சூறாவளி மற்றும் எரிமலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர்கள் மற்றும் உடமைகள் பெரும் சேதம் அடைந்தன. இதனால் உங்கள் பணி மிகவும் பொருத்தமானதாகிறது. பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்பிடம்(CDRI) பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
நண்பர்களே,
இந்த ஆண்டு, இந்தியாவும் தனது ஜி20 தலைமை மூலம் உலகை ஒன்றிணைக்கிறது. G20 இன் தலைமையில் நாங்கள் ஏற்கனவே பல பணிக்குழுக்களில் இந்த அமைப்பைச் (CDRI) சேர்த்துள்ளோம். நீங்கள் இங்கு ஆராய்ந்து காணும் தீர்வுகள் உலகளாவிய கொள்கை உருவாக்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் கவனத்தைப் பெறும். குறிப்பாக காலநிலை அபாயங்கள் மற்றும் பேரழிவுகளுக்கு எதிராக, இந்த அமைப்பு (சிடிஆர்ஐ) உள்கட்டமைப்பு மீள்தன்மைக்கு பங்களிக்க இது வாய்ப்பாகும். பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டில் (ICDRI 2023 ) நடைபெறும் கலந்துரையாடல்கள் மிகவும் நெகிழ்ச்சியான உலகத்தின் பகிரப்பட்ட பார்வையை அடைவதற்கான பாதையை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
—–
AP/JL/KPG
My remarks at the International Conference on Disaster Resilient Infrastructure. https://t.co/OEjO3fww7n
— Narendra Modi (@narendramodi) April 4, 2023