Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர்  இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்


இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து  மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளானஇந்தியாவின் தருணம்எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை  இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு காலம் இந்தியாவிற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது, அதை நாம் அனைவரும் ஒன்றாகக் காண்கிறோம். இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது. ஸ்மார்ட்போன் தரவு நுகர்வில் உலகில் முதலிடத்தில் உள்ளது, இந்தியாதான் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாகும்.

நண்பர்களே,

  இன்று, ஒருபுறம், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தி வருவதோடு, மறுபுறம், இந்திய கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.  இந்திய தருணத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விசயம் என்னவென்றால், சொல்லும், செயலும் ஒன்றாக உள்ளது.

 

 

   இன்று நாட்டின் அமைதி மற்றும் செழிப்பு குறித்த தகவல்களே உள்ளது. முன்பு சுற்றுச்சூழலின் பெயரால் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டது. இன்று புதிய மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கு சாதகமான நநநநவருகின்றன.

நண்பர்களே,

கடந்த 9 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த வீடுகளில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைப் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணரும் தருணம் இந்தியாவுக்கு வரப்போகிறது  என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

  இந்தியாவின் 11 கோடி சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் மூலம் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

நாடு முன்னேற வேண்டுமானால், புதியதை ஏற்றுக்கொள்ளும் திறனும், பரிசோதனை மனப்பான்மையும் இருக்க வேண்டும். உக்ரைன் நெருக்கடியின் போது அரசு   சுமார் 14 ஆயிரம் குடும்பங்களுடன் இணைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த மனித நேய ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால், கொரோனாவுக்கு எதிராக இவ்வளவு பெரிய போரில் தேசம் வெற்றி பெற்றிருக்காது.

நண்பர்களே,

இந்தியாவின் பங்களிப்பு சர்வதேச அளவில் நிலவும் நிலையில், இந்திய ஊடகங்களும், சர்வதேச அளவில் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தியாவின் தருணத்தைஅனைவரின் முயற்சிமூலம் வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அருண், இந்தியா டுடே குழுமத்தினருக்கும், எனக்கு இங்கு பேச வாய்ப்பு அளித்ததற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908473

***

SRI/IR/AG/KRS