பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதில் பெரும் பங்களிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலைத் திட்டம், ஸ்ரீரங்கப்பட்னா, கூர்க், ஊட்டி மற்றும் கேரளா போன்ற பகுதிகளை எளிதில் அணுகும் நோக்கத்துடன், அப்பகுதியின் சுற்றுலா வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று கூறியிருந்ததற்கு திரு மோடி பதிலளித்துள்ளார்.
இந்தத் திட்டம் என்எச்-275 இன் ஒரு பகுதியை உள்ளடக்கியதுடன், நான்கு ரயில்வே மேம்பாலங்கள், ஒன்பது முக்கியத்துவம் வாய்ந்த பாலங்கள், 40 சிறிய பாலங்கள் மற்றும் 89 சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களைக் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“கர்நாடகத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதில் பங்களிக்கும் ஒரு முக்கியமான இணைப்புத் திட்டம்.”
***
(Release ID: 1905464)
AD/PKV/AG/RR
An important connectivity project which will contribute to Karnataka’s growth trajectory. https://t.co/9sci1sVSCB
— Narendra Modi (@narendramodi) March 10, 2023