Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிவமோகா விமான நிலையம் வர்த்தக இணைப்பிற்கு ஊக்கமளித்து, சுற்றுலாவை மேம்படுத்தும்: பிரதமர்


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா விமான நிலையம் வர்த்தக இணைப்பிற்கு ஊக்கமளித்து, சுற்றுலாவை மேம்படுத்தும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார். சிவமோகா தொகுதியின் மக்களவை உறுப்பினரான திரு.பி.ஒய்.ராகவேந்திராவின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர், சிவமோகாவில் விமான நிலையம் அமைய வேண்டும் என்ற கனவு நனவாகிறது. சிவமோகா விமான நிலையம் வெறும் விமான நிலையமாக நிலை நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மல்நாத் பகுதியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்  என்றார்.

 

கர்நாடகாவின் சிவமோகாவில் வரவிருக்கும் விமான நிலையம் குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“சிவமோகா விமான நிலையம் வர்த்தக இணைப்பிற்கு ஊக்கமளித்து, சுற்றுலாவை மேம்படுத்தும்”.

*****

(Release ID: 1901908)

AP/GS/RR/KRS