Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘பாரிசுகன்னட டிம் டிமாவா’ கலாச்சார திருவிழாவை பிப்ரவரி 25-ம் தேதி  பிரதமர் தொடங்கிவைக்கிறார்


ஞானத்தை வழங்கக் கோரி கன்னட மொழியில் பாடி, ஆடி நடத்தப்படும் கலாச்சாரத் விழாவான ‘பாரிசு கன்னட டிம் டிமாவா’ நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி தல்கதோரா மைதானத்தில் பிப்ரவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார். அங்கு கூடும் மக்கள் மத்தியிலும் பிரதமர் உரையாற்றுகிறார். 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு ஏற்ப ‘பாரிசு கன்னட டிம் டிமாவா’ கலாச்சார திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் வரலாற்றைக் கொண்டாட இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில் நடத்தப்படும் இந்தத் திருவிழா கன்னட பாரம்பரிய கலாச்சாரத்தை நடனம், இசை, நாடகம், கவிதை உள்ளிட்டவற்றின் மூலம் எடுத்துரைக்க நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

*** 

(Release ID: 1901767)