அருணாச்சல பிரதேச மக்களுக்கு அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“சுறுசுறுப்பு மற்றும் தேசபக்திக்கு பெயர் பெற்ற மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேசம் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 1900654)
SRI/PKV/AG/RR
Statehood Day wishes to the people of Arunachal Pradesh, a state synonymous with dynamism and patriotism. The people from the state have contributed to India’s progress in many sectors. I pray that Arunachal Pradesh keeps scaling new heights of progress in the coming years.
— Narendra Modi (@narendramodi) February 20, 2023