விமான நிலைய வசதியைப் பெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ரேவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாகும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
ரேவா நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“வாழ்த்துக்கள். இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம், ரேவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும், மேலும், நமது வேகமான வளர்ச்சியுடன் அவர்கள் இணைவர்”
***
(Release ID: 1899746)
SRI/SMB/AG/RR
बहुत-बहुत बधाई। इस हवाई अड्डे के बनने से रीवा और आसपास के लोगों का जीवन आसान होगा और वे विकास की तेज रफ्तार से जुड़ेंगे। https://t.co/DqM4NOtPwT
— Narendra Modi (@narendramodi) February 16, 2023