எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, அன்பான வரவேற்பு அளித்தார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பின் பேரில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி 2023 ஜனவரி 24 முதல் 26-ம் தேதி வரை, அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவிற்கு தமது இரண்டாவது அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிபர் சிசி, இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியை இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறோம். குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினராக நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்தது அனைத்து இந்தியர்களுக்கும் மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. நாளை நமது விவாதங்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****
(Release ID: 1893392)
SMB/CR/KRS
Warm welcome to India, President Abdel Fattah el-Sisi. Your historic visit to India as Chief Guest for our Republic Day celebrations is a matter of immense happiness for all Indians. Look forward to our discussions tomorrow. @AlsisiOfficial
— Narendra Modi (@narendramodi) January 24, 2023