Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகின் தென்பகுதி தலைவர்களின் குரல் உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமரின் நிறைவுரை


மேன்மை தங்கிய தலைவர்களே!

உங்களது  எண்ணங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கருத்துக்கள், முதலாவது உலகத்தின் தென்பகுதி உச்சி மாநாட்டின் அடுத்த 8 அமர்வுக்களுக்கு வழிகாட்டும்.  உங்களது எண்ணங்களிலிருந்து வளரும் நாடுகளுக்கு மனித அடிப்படையிலான வளர்ச்சி மிக முக்கியமான முன்னுரிமை என்பது தெளிவாக விளங்குகிறது. நமது அனைவரது உள்ளங்களிலும் ஓங்கி இருக்கும் பொதுவான சவால்களுக்கு தீர்வுகளை இன்றைய விவாதங்கள் கொண்டுவரும். நமது மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஆதாரங்கள் குறைவாக இருப்பதும், இயற்கையான பருவநிலைக்கும், புவி அறிவியல் பருவநிலைக்கும் இடையில் நிலவும் நிலையற்ற தன்மை அதிகரிப்பதும், முக்கிய கவலை அளிக்கும் விஷயங்களாகும். இருப்பினும் வளரும் நாடுகளாகிய நாம் முழுமையான நேர்மறை ஆற்றலுடனும், முழுமையான நம்பிக்கையுடனும் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

20-ம் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தன. இன்று இந்த வளர்ந்த நாடுகளின் பொருளாதாரங்களில் பல தேக்க நிலையைச் சந்தித்துள்ளன. 21-ம் நூற்றாண்டில், உலகின் தென்பகுதி நாடுகளில் இருந்தே உலக வளர்ச்சி இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. நாம் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றினால் உலகுக்கு நமது செயல்திட்டத்தை நிர்ணயிக்கலாம். இன்றும், நாளையும் நடைபெறவுள்ள அமர்வுகளில் நமது விவாதங்களில் இருந்து உருவாகும் மதிப்புமிக்க கருத்துக்களை மேம்படுத்தி நாம் வடிவமைக்கலாம். நாம் ஒன்றாகச் சேர்ந்து என்ன செய்ய முடியுமோ, உலக செயல் திட்டத்துக்காக நாம் எதைக் கோர முடியுமோ அவற்றை உலகின் தென்பகுதிக்கான செயல் திட்டங்களாக உருவாக்குவதே நமது முயற்சியாகும். தென்பகுதியின் குரல் தனது சொந்த தொனியில் இருக்க வேண்டும். நம்மால்  உருவாக்கப்படாத நடைமுறைகளை சார்ந்திருக்கும் சுழற்சி மற்றும் சூழல்களில் இருந்து நாம் ஒன்று சேர்ந்து விடுபடுவது அவசியமாகும்.

உங்களது நேரத்தை ஒதுக்கி கலந்து கொண்டதுடன், மதிப்புமிக்க கருத்துக்களைத் தெரிவித்ததற்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

***

(Release ID: 1890620)

PKV/AG/RR