Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்


தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு குறித்து ஒடிசாவின் தீன்கனல் பகுதியிலுள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஷிவாங்கி என்ற மாணவியின் கருத்தை வெளியிட்டிருந்த நவோதயா வித்யாலயா சமிதியின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

 

என்விஎஸ்ஸின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்;

 

“தேர்வின்போது ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து மாணவர்களிடமிருந்து பல சுவாரஸ்யமான கருத்துகளைப்  பெற்று வருகிறேன். இந்தியா முழுவதிலும் இருந்து, மாணவர்கள் இதுபோன்று ஆர்வத்துடன் பங்கேற்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

****

(Release ID: 1890145)

CR/PLM/RR