கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி அவர்களே, சுரிநாம் அதிபர் திரு.சந்திரிகா பிரசாத் சந்தோகி அவர்களே, மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் திரு.மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களே, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களே, இதர அமைச்சரவை சகாக்களே, உலகெங்கிலுமிருந்து இங்கு கூடியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் 2023 புத்தாண்டின் வாழ்த்துக்கள்.
நான்கு வருடங்களுக்கு பிறகு பழைய வடிவத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும், புனித நர்மதா நதியால் புகழ்பெற்ற, பசுமையான, பழமையான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக தலமான மத்திய பிரதேச மாநில மண்ணில், இம்மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தூர் ஒரு நகரம் என்பதோடு சமையலுக்கு புகழ்பெற்ற நகரமாக விளங்குவதுடன், தூய்மை இயக்கத்தில் சாதனைபடைத்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டு அண்மையில் நிறைவடைந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் எண்ணிலடங்கா வழிகளில் சிறப்பு வாய்ந்தது.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது புகழ்மிக்க சகாப்தத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்களிப்பால், இந்தியாவின் தனித்துவமிக்க உலகளாவிய பார்வை வலுப்பெறும்.
உலகம் முழுவதையும் சொந்த நாடாக எண்ணி, மனிதநேயத்துடன் கலாச்சார விரிவாக்கத்திற்கான அடித்தளத்தை நமது முன்னோர்கள் இட்டனர். இந்தியர்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளுக்கு மத்தியில் வாழும் போது உலகின் அனைத்துப் பகுதிகளையும், கடந்து வந்துள்ளனர். வணிக கூட்டு மூலம் செம்மையான முறைகளை காண்பதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
உலக வரைபடத்தில் கோடிக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களை காணும் போது, இரண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இது ‘வசுதைவ குடும்பகம்’ மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் மிகவும் ஜனநாயக, அமைதியான மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக கருதப்படும் போது,ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமை பன்மடங்கு அதிகரிக்கிறது. ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரையும் இந்தியாவின் தேசிய தூதர் என்று அழைக்கிறேன். ஏனென்றால், உலகம் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடும் போது சக்திமிக்க மற்றும் திறமையான இந்தியாவின் குரலை எதிரொலிக்கிறது. நீங்கள் இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவில் உற்பத்தி செய்வோம், யோகா மற்றும் ஆயுர்வேதம், இந்தியாவின் குடிசைத் தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் தேசிய தூதர்கள்,. அதே நேரத்தில், நீங்கள் இந்தியாவின் சிறு தானியங்களின் தூதர்கள். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது சில சிறு தானிங்களை நீங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்தியாவைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உலகத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மற்றொரு முக்கியப் பங்கு உள்ளது. உலகம் இந்தியாவை மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்குகிறது. இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட தடுப்பூசி 220 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நிலையற்ற தருணத்தின் போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உருவெடுத்துள்ளது. மின்னணு உற்பத்தித் துறையில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மேக் இன் இந்தியா போன்றவற்றிலும் வளர்ச்சி காணப்படுகிறது. தேஜாஸ் போர் விமானங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் விக்ராந்த், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹந்த் ஆகியவற்றால், இந்தியாவைப் பற்றி உலக மக்கள் ஆர்வமாக இருப்பது இயற்கையான ஒன்று. உலகின் 40 சதவீத மின்னணு பரிவர்த்தனைகள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவின் மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறையின் திறன் அதிகரித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றம் பற்றியும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜி-20 தலைமைத்துவத்தை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்டு இருப்பதையும் இந்தியாவின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்று நீடித்த எதிர்காலத்தை அடைவது குறித்து உலகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான வாய்ப்புடன் இந்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஜி-20 தலைமை என்பது வெறுமனே ராஜீய நிகழ்வு அல்ல. இதனை ‘அதிதி தேவோ பவ’ என்ற உணர்வின் சாட்சியாக பொது மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றப்படவேண்டும். ஜி-20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200-க்கும் அதிகமான சந்திப்புகள் நடத்தப்பட உள்ளன. பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இது மகத்தான வாய்ப்பாக இருக்கும்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம் தத்தம் நாடுகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கையையும், போராட்டத்தையும் ஆவணப்படுத்துவதற்கான நீடித்த முயற்சிகள் இருக்க வேண்டும்.
சிறப்பு விருந்தினர்களான கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, சுரிநாம் குடியரசு அதிபர் திரு சந்திரிகா பிரசாத் சந்தோகி ஆகியோருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
————-
(Release ID: 1889782)
PKV/RR
Addressing the Pravasi Bharatiya Divas Convention in Indore. The Indian diaspora has distinguished itself all over the world. https://t.co/gQE1KYZIze
— Narendra Modi (@narendramodi) January 9, 2023
Our Pravasi Bharatiyas have a significant place in India's journey in the 'Amrit Kaal.' pic.twitter.com/OEcKLXvXm2
— PMO India (@PMOIndia) January 9, 2023
हमारे लिए पूरा संसार ही हमारा स्वदेश है। pic.twitter.com/QhD6yZfumn
— PMO India (@PMOIndia) January 9, 2023
प्रवासी भारतीयों को जब हम global map पर देखते हैं, तो कई तस्वीरें एक साथ उभरती हैं। pic.twitter.com/szb6SNPLNO
— PMO India (@PMOIndia) January 9, 2023
Indian diaspora are our 'Rashtradoots.' pic.twitter.com/vwJwLZyXbp
— PMO India (@PMOIndia) January 9, 2023
Today, India is being looked at with hope and curiosity. India's voice is being heard on global stage. pic.twitter.com/rv0CcqTQ0A
— PMO India (@PMOIndia) January 9, 2023
हमें G-20 केवल एक diplomatic event नहीं, बल्कि जन-भागीदारी का एक ऐतिहासिक आयोजन बनाना है। pic.twitter.com/Ai0bhW0ZUX
— PMO India (@PMOIndia) January 9, 2023
India's talented youth are the country's strength. pic.twitter.com/ZHxaBzyUzB
— PMO India (@PMOIndia) January 9, 2023
This year’s Pravasi Bharatiya Divas convention comes at a crucial point in India’s history. In this Amrit Kaal, the role of our diaspora will be even more important. pic.twitter.com/Se86wJf1Cb
— Narendra Modi (@narendramodi) January 9, 2023
Our diaspora are our nation’s effective brand ambassadors. pic.twitter.com/u9yvwdMv8z
— Narendra Modi (@narendramodi) January 9, 2023
India’s G-20 Presidency is more than diplomatic events. It presents a unique opportunity to showcase the spirit of Jan Bhagidari or collective spirit. In this context, here’s a request from my side… pic.twitter.com/NmBWXlWzO3
— Narendra Modi (@narendramodi) January 9, 2023