வணக்கம்!
நண்பர்களே,
நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில், அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும்.
அரசின் முயற்சியால் மட்டும் வெற்றி கிடைக்காது. பொது மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களும் நீர் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களில் அதிகளவில் பங்கேற்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் பொறுப்புடைமையை குறைக்காது. அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது விதிப்பது அர்த்தமல்ல. மேலும், இயக்கத்தில் ஈடுபடும் முயற்சிகள் மற்றும் செலவிடப்படும் பணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதே பொதுமக்களின் பங்கேற்பின் மிகப்பெரிய நன்மையாகும். பொதுமக்கள் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்படும் போது, அவர்கள் அந்தப்பணியின் தீவிரத்தன்மையையும் அறிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது இயக்கத்திற்கும் பொதுமக்களிடையே உரிமை என்ற உணர்வு ஏற்படுகிறது.
நண்பர்களே,
மக்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்த போது, மக்களிடையே ஓர் உணர்வு ஏற்பட்டது. அசுத்தங்களை களைவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது, பல்வேறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவது அல்லது கழிப்பறைகள் கட்டுவது என பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்தது. ஆனால் அசுத்தம் எங்கேயும் இல்லை என்று மக்கள் முடிவு செய்தபோது இந்த இயக்கத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. நீர் பாதுகாப்பில் பொது மக்களின் பங்கேற்பு குறித்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நீர் விழிப்புணர்வு விழாக்கள் அல்லது’ நீர் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவில் நாம் ஏற்பாடு செய்ய முடியும். பள்ளிகளில் பாடத்திட்டம் முதல் செயல்பாடுகள் வரை புதுமையான வழிகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, அதில் இதுவரை 25 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களை இணைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளைக் கண்டறிவதோடு, புவி உணர்வு மற்றும் புவி- வரைபடம் போன்ற தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கொள்கை அளவில் நீர் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ள அரசின் கொள்கைகள் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளை கொண்டு வர வேண்டியது முக்கியமாகும்.
நண்பர்களே, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை வழங்குவதற்கான ஒரு மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி அளவுகோலாக நீர் வள இயக்கம் இருப்பது அதன் வெற்றிக்கு சான்றாகும். பல மாநிலங்கள் இந்த திசையில் முன்னேறி வரும் நிலையில், பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், எதிர்காலத்திலும் அதன் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் நீர்வள இயக்கத்தை வழிநடத்த வேண்டும். பணிகள் முடிந்த பிறகு, போதுமான மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெற்றுள்ளதாக சான்றளிக்க வேண்டும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கிராமத்தில் குழாய் மூலம் தண்ணீர் பெறும் வீடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு மாதாந்திர அல்லது காலாண்டு அறிக்கையை இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், தண்ணீரின் தரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தண்ணீர் பரிசோதனை செய்யும் முறையும் உருவாக்கப்பட வேண்டும்.
தொழில்துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரு துறைகளிலும் நீர் தேவைகள் உள்ளன. நீர் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரங்களை நடத்த வேண்டும். பயிர் பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற தொழில் நுட்பங்களின் உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும்.
“ஒரு துளி அதிகப் பயிர்” என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும், மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அடல் நிலத்தடி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவதற்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நீரூற்றுகளை புதுப்பிக்க, வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதும் அவசியமாகும்.
நீர் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதுடன், இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். உள்ளூர் அளவில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விநியோகம் முதல் தூய்மைப் பணி மற்றும் கழிவு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளைக் காணும் செயல்திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துகள் தயாரிக்க வேண்டும். கிராமங்களில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான நிதியை பஞ்சாயத்து அளவில் ஏற்படுத்த வேண்டு. அதற்கான பணிகள் நடைபெறுவது குறித்த வழிவகைகளை காண வேண்டும். மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் வெற்றி, அது போன்ற இயக்கங்கள் மாநில அரசுகளுக்கு அவசியம் என்பதைக் காட்டுகின்றன. அவை ஆண்டு தோறும் மதிப்பிடப்பட வேண்டும். மழைக்காக காத்திருக்காமல், மழைக்கு முன்பாக திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
நண்பர்களே, நீர் பாதுகாப்புத் துறையில் சுற்றுப்பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையில் சுற்றுப்பொருளாதாரம் குறித்து அரசுக்குப் பொறுப்பு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பயன்படுத்தும் போதும், புதிய நீரை பாதுகாக்கும் போதும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் முறையும் பயனடைகிறது. ஆதலால் நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவை அவசியம். பல்வேறு நோக்கங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும். நமது ஆறுகள், நமது நீர்நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்த தண்ணீர் சுற்றுச்சூழல் முறையின் மிகவும் முக்கியமானப் பகுதியாகும். அணைத்து மாநிலத்திலும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தூய்மை கங்கை இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் ஆறுகளின் பாதுகாப்புக்காக அதே போன்ற இயக்கங்களை தொடங்க முடியும். தண்ணீர் துறையில் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் பொறுப்பாகும். நன்றி!
***
(Release ID: 1888809)
KPV/RJ
My remarks at All-India Water Conference on the theme 'Water Vision @ 2047.' https://t.co/HIV0t1dbgA
— Narendra Modi (@narendramodi) January 5, 2023
'Water Vision at 2047' is a significant aspect in the country's journey for the next 25 years. pic.twitter.com/6VIYE9Jqhb
— PMO India (@PMOIndia) January 5, 2023
We have to increase public participation for water conservation efforts. pic.twitter.com/EJxfZWPciS
— PMO India (@PMOIndia) January 5, 2023
'Jan Bhagidari' develops a sense of ownership among the citizens. pic.twitter.com/oNWWcnOach
— PMO India (@PMOIndia) January 5, 2023
Special campaigns must be organised to further water security. pic.twitter.com/O9X1juVR6f
— PMO India (@PMOIndia) January 5, 2023
Efforts like Pradhan Mantri Krishi Sinchayee Yojana and Atal Bhujal Mission are aimed at furthering water security. pic.twitter.com/eA8ftme8tn
— PMO India (@PMOIndia) January 5, 2023
जल संरक्षण के क्षेत्र में भी circular economy की बड़ी भूमिका है। pic.twitter.com/0ROqPMbmkh
— PMO India (@PMOIndia) January 5, 2023
हमारी नदियां, हमारी water bodies पूरे water ecosystem का सबसे अहम हिस्सा होते हैं। pic.twitter.com/Gwopa07LQx
— PMO India (@PMOIndia) January 5, 2023