Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பிவி ஐயர் பிரதமருடன் சந்திப்பு


ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பிவி ஐயரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிவி ஐயரின் உடல் தகுதி தொடர்பான புத்தகத்தின் பிரதியையும் பிரதமர் பெற்றுக்கொண்டார்.

 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஏர் மார்ஷல் பிவி ஐயரை (ஓய்வு) இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை தொடர்பான அவரது பேரார்வம் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் நல்ல உடல் தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கான அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவருடைய நூலின்  பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.

 

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

******

MS/PLM/DL