Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் கடந்த மாத ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் தொகுப்பாக வந்துள்ள ஒரு கையேட்டைப் பகிர்ந்துள்ளார்


இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், விண்வெளித்துறையில் தொடர் வெற்றி, இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கடந்த மாத ‘மன் கி பாத்’ (நவம்பர் 2022) நிகழ்ச்சியின் தொகுப்பை ஒரு கையேடு வடிவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,

 

“இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், விண்வெளித்துறையில் நமது தொடர் வெற்றி, இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கடந்த மாத #MannKiBaat  நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான பதிவுகளை உள்ளடக்கிய இந்த மின்-புத்தகத்தை வாசித்து மகிழுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

**************

SM/GS/DL