வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுமாறும், 1800-11-7800 என்ற எண்ணில் தங்கள் செய்தியை பதிவு செய்யுமாறும் மக்களை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
MyGov இன் அழைப்பைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“இம்மாதம் 25-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள 2022-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சிக்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலாக உள்ளேன். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுங்கள், அல்லது உங்கள் செய்தியை 1800-11-7800 இல் பதிவு செய்யுங்கள்.”
**************
(Release ID: 1882970)
SRI/PKV/RR
2022's last #MannKiBaat will take place on the 25th of this month. I am eager to receive your inputs for the programme. I urge you to write on the NaMo App, MyGov or record your message on 1800-11-7800.https://t.co/W9ef5kQZXj
— Narendra Modi (@narendramodi) December 13, 2022