Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘நாக்பூரில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நிறைவு செய்யப்பட்ட முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்தார்

‘நாக்பூரில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நிறைவு செய்யப்பட்ட முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்தார்


ஃப்ரீடம் பார்க் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து காப்ரி மெட்ரோ ரயில்நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் மேற்கொண்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவு செய்யப்பட்ட ‘நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காப்ரி ரயில் நிலையத்தில் இன்று அடிக்கல் நாட்டினார். காப்ரி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் மற்றும் பிரஜாபதி நகர் முதல் லோக்மான்யா நகர் வரையிலான இரண்டு மெட்ரோ ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ 8,650 கோடிக்கு அதிகமான மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ 6 700 கோடிக்கு அதிகமான  மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது.

ஃபிரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாக்பூர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் காப்ரி மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தார்.

ஃப்ரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோவில் ஏறுவதற்கு முன், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் பார்வையிட்டார். அவர் கனவுகளை விட சிறந்தது எனும் பொருள் கொண்ட சப்னோ சே பெஹ்தர்கண்காட்சியையும் பார்வையிட்டார். 

ஏஃப்சி நுழைவு வாயிலில் தானே இ-டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, மாணவர்கள், பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் பயணம் செய்தார்.அவர் தான் பயணத்தின் போது அவர்களுடன் உரையாடினார்.

 

இது குறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

“நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி நாக்பூர் மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டு மெட்ரோ ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், மெட்ரோவில் பயணம் மேற்கொண்டேன்.

மெட்ரோ இனிமையாகவும் வசதியாகவும் இருக்கிறது”

என்று தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் அலுவலகம் தனது ட்வீட்டர் பதிவில்:

 

”நாக்பூர் மெட்ரோ ரயிலில், மாணவர்கள், ஸ்டார்ட் அப் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் உரையாடினார்” என்று தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநில முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் காப்ரி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமருடன் கலந்து கொண்டனர்.

பின்னணி

நகர்ப்புற இயக்கத்தின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சியாக, பிரதமர் நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைநாட்டிற்கு அர்ப்பணித்தார் மற்றும் காப்ரியில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் (ஆரஞ்சு லைன்) மற்றும் பிரஜாபதி நகர் முதல் லோக்மான்யா நகர் (அக்வா லைன்) வரை இரண்டு மெட்ரோ ரயில்களை காப்ரி மெட்ரோ ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8650 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ 6,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்படும் நாக்பூர் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

******

SRI / GS / DL