Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் நண்பர்கள் அடங்கிய 800-க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் எழுச்சியுடன் குழுமியிருந்தனர்.

பிரதமர் தமது உரையில், இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையேயான நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகளை எடுத்துக் கூறினார். இரு நாடுகளுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கும் “பாலி ஜத்ரா” என்னும் மிகப் பழமையான பாரம்பரியத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் காணப்படும் பொதுவான அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு மூலம், இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உயர்த்தி வருவதை பிரதமர் பாராட்டினார். இந்தியா-இந்தோனேஷியா உறவில் காணப்படும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பற்றி கூறிய அவர், இந்த உறவை வலுப்படுத்துவதில் இந்திய சமுதாயத்தினரை மிக முக்கியப் பங்காற்றியதை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பற்றி விளக்கிய பிரதமர், டிஜிட்டல் தொழிலநுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்து வரும் அற்புதமான வளர்ச்சியையும், சாதனைகளையும் பட்டியலிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கான செயல் திட்டம், உலகின் அரசியல் பொருளாதார அபிலாசைகளை உள்ளடக்கியது என்று கூறிய அவர், தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு உலக நலனுக்கானது என்றார்.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, அடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் கலந்து கொள்ளுமாறு இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

**************

MSV/PKV/RR/IDS