Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கணிதமேதை பத்மஸ்ரீ திரு ஆர்.எல்.காஷ்யப்பின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


கணிதமேதை பத்மஸ்ரீ திரு ஆர்.எல்.காஷ்யப்பின்  மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

“திரு ஆர்.எல். காஷ்யப் ஒரு பன்முக ஆளுமை மற்றும் சிறந்த அறிஞராக இருந்தார். வளமான கணிதம் மற்றும் விஞ்ஞான அறிவால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அவர் இந்தியாவின் கலாச்சார வேர்கள் குறித்து மிகவும் பெருமைப்பட்டவர் மற்றும் வேதக் கல்வியில்  தனித்துவமிக்கவராக திகழ்ந்தவர். அவரது மறைவால் வேதனை அடைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி.”

*************