ஐ.நா. பொதுச்செயலாளர் திரு அன்டோனியோ குட்ரஸ் அவர்களே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களே, உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளே, வணக்கம். திரு குட்ரசை குஜராத்திற்கு வரவேற்பது குடும்பத்தில் உள்ள ஒருவரை வரவேற்பது போன்றது..
நண்பர்களே, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்க முன்முயற்சியை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி.
தரநிலைகள் விதிவிலக்காக உள்ள போது, பதிவுகள் மிகப்பெரியதாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நடவடிக்கைகள் மற்றும் பருவநிலைப் பாதுகாப்பு ஆகியவற்றை தொடங்கிய நாட்டிலேயே முதல் மாநிலம் குஜராத். கால்வாய்களில் சூரிய தகடுகளை நிறுவுவது அல்லது மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்குவது எதுவாக இருந்தாலும், குஜராத் எப்போதும் முன்னோக்கி வருகிறது.
பருவநிலை மாற்றம் என்பது கொள்கையுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை மட்டுமே. இது ஒரு சிந்தனை செயல்முறைக்கு வழிவகுப்பதோடு, அனைத்து முக்கிய பிரச்சினையையும் அரசிடமோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ மட்டுமே விட்டுவிடுகிறது. மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் எதிர்பாராத பேரழிவுகள் காணப்படுகின்றன. பருவநிலை மாற்றம் என்பது கொள்கை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும், சுற்றுச்சூழலுக்கு தனிமனிதனாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் பங்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தாங்களாகவே கண்டறிந்துள்ளனர் என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.
நண்பர்களே, மிஷன் லைஃப் என்ற மந்திரம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்பதாகும். இது இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் சக்தியை இணைக்கிறது.அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் ஜனநாயகப்படுத்துகிறது, இதில் அனைவரும் பங்கேற்க முடியும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய தூண்டுகிறது. நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்று சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் நம்புகிறது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் எல்இடி பல்புகளை சார்ந்து இருக்கிறோம். இது பெரிய சேமிப்புக்கும், சுற்றுச்சூழல் நன்மைகளுக்கும் வழிவகுத்ததோடு இது தொடர்ச்சியான, நிரந்தர பயன் அளிக்கக்கூடியது.
நண்பர்களே, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், பி3 மாதிரியின் முயற்சியை ஊக்கப்படுத்துகிறது. அதாவது, கோள்களைச் சார்ந்த மக்கள். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், பூமியில் உள்ள மக்களை கோள்களைச் சார்ந்த மக்களாக ஒன்றிணைக்கிறது, அவர்கள் அனைவரையும் அவர்களின் எண்ணங்களில் ஒன்றிணைக்கிறது. இது கோள்களின் வாழ்க்கை முறை கொள்கைகளின் அடிப்படையில், கோள்களுக்காக மற்றும் கோள்களால் செயல்படுகிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பதன் மூலம் மட்டுமே எதிர்காலத்திற்கான பாதையை அமைக்க முடியும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையை வழிபடும் பாரம்பரியம் உள்ளது. நீர், பூமி, நிலம், நெருப்பு போன்ற இயற்கையின் கூறுகளின் முக்கியத்துவத்தை வேதங்கள் துல்லியமாகக் குறிப்பிடுகின்றன. பூமி நமது தாய், நாம் அவளுடைய குழந்தைகள் என அதர்வனவேதத்தில் உள்ளது.
பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. இன்று, உலகளவில் சராசரியாக ஆண்டுக்கு 4 டன் அளவில் கார்பன் வெளியீடு இருக்கும் போது, இந்தியாவில் அது சுமார் 1.5 டன்கள் மட்டுமே. இருந்தபோதிலும், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க இந்தியா முன்னணியில் உள்ளது. இலவச எரிவாயு திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ‘அமிர்த நீர் நிலைகள், கழிவில் இருந்து செல்வம் போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா இன்று உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நான்காவது பெரிய திறனைக் கொண்டுள்ளது. ,இன்று நாம் காற்றாலை ஆற்றலில் நான்காவது இடத்திலும், சூரிய சக்தியில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறோம். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 290 சதவீதம் அதிகரித்துள்ளது. காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து 40 சதவீத மின்சாரத் திறனை அடைவதற்கான இலக்கையும் நாம் அடைந்துள்ளோம். பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கையும் அடைந்துள்ளோம், காலக்கெடுவுக்கு 5 மாதங்களுக்கு முன்பே. தேசிய ஹைட்ரஜன் இயக்கம் மூலம், இந்தியா சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இது இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளின் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவும். முன்னேற்றமும் இயற்கையும் எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்போது இந்தியாவும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, நமது வனப்பகுதியும் அதிகரித்து வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியா இப்போது உலகத்துடனான தனது கூட்டாண்மையை மேலும் அதிகரிக்க விரும்புகிறது. அதே நேரத்தில் அத்தகைய இலக்குகளை நோக்கி தனது உறுதியை வலுப்படுத்த விரும்புகிறது. பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது கருத்தை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் இந்த தொடரின் அடுத்த படியாகும்.
இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றும் போதெல்லாம், உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச யோகா தினத்தை இந்தியா முன்மொழிந்த போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருந்தது. இன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது ஊக்கம் அளிக்கிறது. சர்வதேச சிறுதானிய ஆண்டுக்கும் ஐநா ஆதரவு இருந்தது. இந்தியா தனது பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தானியங்களுடன் உலகை இணைக்க விரும்புகிறது. சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், அதை உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்வதில் வெற்றி பெறும். இயற்கையை யார் பாதுகாக்கிறார்களோ, அவர்களை இயற்கை பாதுகாக்கிறது என்ற மந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும்.. நமது சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை பின்பற்றுவதன் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்.
***************
Mission LiFE is a global movement to safeguard our environment from impact of climate change. https://t.co/aW6Vr556TA
— Narendra Modi (@narendramodi) October 20, 2022
PM @narendramodi begins his address at global launch of Mission LiFE.
— PMO India (@PMOIndia) October 20, 2022
The event is happening at the Statue of Unity in Kevadia. pic.twitter.com/mfNYxex3DD
Gujarat has been leading from the front in efforts towards renewable energy and environment protection. pic.twitter.com/A6jCMFx44e
— PMO India (@PMOIndia) October 20, 2022
Climate change goes beyond only policy making. pic.twitter.com/myYczP3XO4
— PMO India (@PMOIndia) October 20, 2022
मिशन लाइफ का मंत्र है ‘Lifestyle For Environment’ pic.twitter.com/KXrrqF2KMz
— PMO India (@PMOIndia) October 20, 2022
Mahatma Gandhi spoke about Trusteeship.
— PMO India (@PMOIndia) October 20, 2022
Mission LiFE encourages us to be a trustee of the environment. pic.twitter.com/QTbh9cyRs5
Pro Planet People. pic.twitter.com/1Yr0ITiHmF
— PMO India (@PMOIndia) October 20, 2022
Lifestyle of the planet, for the planet and by the planet. pic.twitter.com/2G4taEAGTE
— PMO India (@PMOIndia) October 20, 2022
Reduce, reuse, recycle as well as circular economy has been an integral part of Indians since thousands of years. pic.twitter.com/aYHBBKEFun
— PMO India (@PMOIndia) October 20, 2022
India is committed to tackle the menace of climate change. pic.twitter.com/2LHaaBVxXF
— PMO India (@PMOIndia) October 20, 2022
‘प्रगति भी और प्रकृति भी’ pic.twitter.com/xiFncvCZHD
— PMO India (@PMOIndia) October 20, 2022