என்எஸ்ஐஎல், இன்-ஸ்பேஸ், இஸ்ரோ ஆகிய இந்திய விண்வெளி முகமைகள்/நிறுவனங்கள், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனமான எல்விஎம்3யை வெற்றிகரமாக ஏவியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“உலகளாவிய இணைப்பிற்காக வடிவமைக்கப்பட்ட 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களுடன் நமது அதிக எடை கொண்ட எல்விஎம்3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு @NSIL_India @INSPACeIND @ISRO க்கு வாழ்த்துக்கள். எல்விஎம்3 தற்சார்பு இந்தியாவை பிரதிபலிப்பதுடன், உலகளாவிய வணிக ஏவுதல் சேவை சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.”
***************
Congratulations @NSIL_India @INSPACeIND @ISRO on the successful launch of our heaviest launch vehicle LVM3 with 36 OneWeb satellites meant for global connectivity. LVM3 exemplifies Atmanirbharta & enhances India’s competitive edge in the global commercial launch service market.
— Narendra Modi (@narendramodi) October 23, 2022