வணக்கம்!
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்வ்ரத் அவர்களே.. முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே.. அமைச்சர்களே.. கல்வித்துறையை சேர்ந்தவர்களே.. குஜராத்தின் சிறந்த மாணவர்களே.. மற்ற பிரமுகர்களே.. தாய்மார்களே.. சகோதர, சகோதரிகளே..
இன்று குஜராத் அமிர்த காலத்துக்கான அமிர்த தலைமுறையை உருவாக்குவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கும், வளர்ச்சியடைந்த குஜராத்துக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். மிகச் சிறந்த பள்ளிகள் தொடங்கப்பட்டதற்கு ஒத்துழைத்த குஜராத்தின் மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளம்சகாக்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களே..
நாடு மொபைல் மற்றும் இணைய சேவைகளில் 5ஜி தொழில்நுட்பத்தில் நுழைந்துள்ளது. இதுவரை 1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளோம். தற்போது 5ஜி தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கான தொழில்நுபடத்தின் வேகம் அதிகரித்துள்ளதோடு, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.
நண்பர்களே..
நாட்டில் இதுவரை வெவ்வேறு தலைமுறைக்கான பள்ளிகளை பார்த்துள்ளோம். தற்போது நவீன வசதியுடைய பள்ளிகள், நவீன வகுப்பறைகள், நவீன கற்பிக்கும் முறை உள்ளிட்டவை நமது கல்வி முறையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இப்போது நமது பள்ளி மாணவர்களும் மெய்நிகர் வசதி, இணைய வசதி ஆகியவற்றை எளிதாக பெற முடியும். மிகச் சிறந்த பள்ளிகள் திட்டத்தில், நாட்லேயே முதன்முறையாக குஜராத் முக்கியமான, முதல்படியை எடுத்து வைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் மற்றும் அவரது அமைச்சரவைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகளே..
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகளை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கப்படவுள்ள இந்த திட்டம் முன்னோடி திட்டமாகும். இது ஆண்டுதோறும் கண்காணிக்கப்பட்டு, குறைகள் ஏதும் இருந்தால், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வரப்படும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய தேசிய கல்வி கொள்கையின் முன்மாதரி பள்ளிகளாக இருக்கும்.
நண்பர்களே..
சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் அடிமை மனோபாவத்திலிருந்து மக்களை விடுவிக்க நாடு உறுதி எடுத்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை அடிமை மனோபாவத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், திறமைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான சிறந்த முயற்சியாகும். அறிவுடைமையின் அளவுகோலாக ஆங்கில மொழி எடுத்து கொள்ளப்பட்டதால், கிராமங்களில் உள்ள ஏழைக்குடும்பத்தினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போய் விட்டது. எத்தனையோ திறமையான குழந்தைகள் தங்களுக்கு புரியும் மொழியில் வாய்ப்பு இல்லாததால், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகளை கற்க முடியாமல் போய்விட்டது. தற்போது, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்றவற்றை இந்திய மொழிகளிலும் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற தொடங்கியுள்ளனர்.
நண்பர்களே..
பண்டைய காலத்திலிருந்தே இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி முக்கிய கருவியாக இருந்துள்ளது. இயற்கையாகவே அறிவின் ஆதரவாளராக இந்தியா இருந்துள்ளது. நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களை நிறுவி, மிகப்பெரிய நூலகங்களையும் அமைத்துள்ளனர்.
இன்றும் அறிவு, திறமை, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கிய அடையாளமாக இந்தியா திகழ்வதற்கு இதுவே முக்கிய காரணமாகும். சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், நம் பழம் பெருமைகளை மீட்டெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் அறவில் சிறந்த நாடாக மாறுவதற்கான ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கான வாய்ப்புகளும் காத்து கிடக்கின்றன. 21-ஆம் நூற்றாண்டில் அறிவியல், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகளவில் இருக்கும். இதை என் நாட்டு இளைஞர்களின் திறமை மீது நான் வைத்துள்ள நம்பிக்கையால் சொல்ல துணிகிறேன்”.
**************
KG/SM/SNE
Mission Schools of Excellence will help scale up education infrastructure in Gujarat. https://t.co/lHhlzttZwo
— Narendra Modi (@narendramodi) October 19, 2022
आज गुजरात अमृतकाल की अमृत पीढ़ी के निर्माण की तरफ बहुत बड़ा कदम उठा रहा है। pic.twitter.com/1Oiy3p5Axj
— PMO India (@PMOIndia) October 19, 2022
5G will usher in a transformation across India. pic.twitter.com/yODnTBS728
— PMO India (@PMOIndia) October 19, 2022
5G will revolutionize the education sector. pic.twitter.com/LO61tOusw7
— PMO India (@PMOIndia) October 19, 2022
PM @narendramodi recounts the various measures undertaken in Gujarat for improving the education sector. pic.twitter.com/7BoCCAWylZ
— PMO India (@PMOIndia) October 19, 2022
गुजरात में शिक्षा के क्षेत्र में, हमेशा ही कुछ नया, कुछ Unique और बड़े प्रयोग किए गए हैं। pic.twitter.com/oMz5IznOcO
— PMO India (@PMOIndia) October 19, 2022
PM-SHRI schools will be model schools for implementation of the National Education Policy. pic.twitter.com/ZGBW9BWiUL
— PMO India (@PMOIndia) October 19, 2022
In Azadi Ka Amrit Kaal, India has pledged to free itself from colonial mindset. The new National Education Policy is a step in that direction. pic.twitter.com/L3z3PJsx4F
— PMO India (@PMOIndia) October 19, 2022
शिक्षा, पुरातन काल से ही भारत के विकास की धुरी रही है। pic.twitter.com/BGaHIOHHc3
— PMO India (@PMOIndia) October 19, 2022
बीते दो दशकों में गुजरात में शिक्षा के क्षेत्र में जो परिवर्तन आया है, वो अभूतपूर्व है। इस दौरान राज्य के लोगों ने शिक्षा-व्यवस्था का कायाकल्प करके दिखाया है। pic.twitter.com/CSJdo0TVF8
— Narendra Modi (@narendramodi) October 19, 2022
मुझे विश्वास है कि 21वीं सदी में Science and Technology से जुड़े अधिकांश Innovation और Invention भारत में ही होंगे। इसमें भी गुजरात के पास बहुत बड़ा अवसर है। pic.twitter.com/AHO9GcaGSy
— Narendra Modi (@narendramodi) October 19, 2022