Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாச்சலப்பிரதேசத்தின் உனாவில் பெரிய மருந்து பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

இமாச்சலப்பிரதேசத்தின் உனாவில் பெரிய மருந்து பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி உனாவில் பெரிய மருந்து பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி  இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தை  நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார்.  முன்னதாக இன்று உனாவின் அம்ப் அன்டாராவிலிருந்து புதுதில்லிக்கு  புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

குருநானக் தேவ், சீக்கியர்களின் குருக்கள் மற்றும்   மா சிந்த்பூர்ணி ஆகியோருக்கு மரியாதை செலுத்தி தமது உரையை தொடங்கிய பிரதமர், தாந்த்ராஸ் மற்றும் தீபாவளிக்கு முன்னதாக இமாச்சலப்பிரதேசத்திற்கு வெகுமதி அளிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக கூறினார். இமாச்சலப்பிரதேசப் பிரதேசத்துடன்  தமக்கு உள்ள   தொடர்பு குறித்து நினைவு கூர்ந்த அவர்,  அதன் இயற்கை  அளவு குறித்து குறிப்பிட்டார். மா சிந்த்பூர்ணிக்கு முன்பாக  தாம் தலைவணங்குவது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

இரு தொழில் துறைக்கான சிறந்த நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் கல்வித்துறையில் அக்கறை கொண்டு தாம் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.  நாட்டின் இரண்டாவது பெரிய மருந்து பூங்கா உனாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இமாச்சலப்பிரதேசப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு முடிவுற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். இவைகள் மக்களுக்கு சிறந்த பயன் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். பெரிய மருந்து பூங்கா அமைக்கும் மாநிலங்களில் இமாச்சல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பெரிய மருந்து பூங்காவை அமைப்பதற்கு 3 மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இமாச்சலப்பிரதேசப் பிரதேசமும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அம்மாநிலம் மீதான அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஒரு காரணம் என்று தெரிவித்தார். இமாசலப்பிரதேசத்தில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவது என்ற முடிவு அம்மாநிலத்திற்கு அரசு அளிக்கும் முன்னுரிமையை காட்டுவதாக குறிப்பிட்டார். மாநிலத்தின் முந்தைய தலைமுறையினர், ரயிலைக் கூட பார்த்ததில்லை, ஆனால் இன்று மிகவும் மேம்படுத்தப்பட்ட ரயில்கள் இங்கு இயக்கப்படுவதாக கூறினார். மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இரட்டை இயந்திர அரசு  செயல்படுவது திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இமாச்சலப்பிரதேசப் பிரதேச மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும், நிறைவேற்றுவதில் முந்தைய மாநிலம் மற்றும் மத்திய அரசுகள்  கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டார். அந்த சூழ்நிலையால் தாய்மார்களும், சகோதரிகளும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

ஆனால் தற்போது நிலைமை சிறப்பாக மாறியுள்ளதாக அவர் கூறினார். தற்போதைய அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை உணர்ந்து அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்தார். நாங்கள் முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியதோடு மாநிலத்தின் வலிமையான தூண்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பல்வேறு நாடுகள் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் அதன் குடிமக்களுக்கு அடிப்படைத் தேவைகளான கழிப்பறை, கிராமப்புறச் சாலை, நவீன சுகாதார சேவை ஆகியவற்றை அளித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.   எனினும், இந்தியாவில் முந்தைய அரசுகளால், இந்த அடிப்படை வசதிகளை ஏழை மக்களுக்கு அளிப்பது கடினமாக இருந்ததாக தெரிவித்தார். இதனால் மலைப்பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டது என்றும் அருகாமையில் வசித்ததன் காரணமாக இதனை நான் உணர முடிந்தது என்று அவர் கூறினார்.  புதிய இந்தியா கடந்தகால சவால்களை முறியடித்து விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் தற்போது கிடைப்பதாக கூறினார். 20-ம்  நூற்றாண்டு வசதிகளை 21-ம் நூற்றாண்டின் வசதிகளோடு இமாச்சலப் பிரதேசத்திற்கு அளிப்போம் என்று தெரிவித்தார்.  கிராமப்புற சாலைகள்,  2  மடங்கு வேகத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும், கிராமப் பஞ்சாயத்துகளில்  அகண்ட அலைவரிசை வதிய இணைப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  21-ம் நூற்றாண்டு இந்தியாவின் விருப்பங்களை எங்களுடைய அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகில் மருந்து உற்பத்தித் துறையில் இந்தியாவை  முன்னணி நாடாக மாற்றுவதில் இமாச்சலப்பிரதேசம் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், அதன் பங்களிப்பு  அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இமாச்சலப்பிரதேசப் பிரதேசத்தின் வலிமையான மருந்து உற்பத்தித் துறையை உலகே கண்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.  தற்போது மருந்து உற்பத்திக்கான இடுபொருட்கள் இமாச்சலப்பிரதேசத்திலேயே தயாரிக்கப்படும் என்றும் இதற்காக மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருப்பது பெருமளவு குறையும் என்று அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்  ஏழைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையை அரசு அளிப்பதாக  கூறிய பிரதமர், தேவை உடையவர்கள் மக்கள் மருந்தகம் மூலம் சேவை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மக்களுக்கு தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகளை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை பெரிய மருந்து பூங்கா மேலும் வலிமைப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார். வேளாண்மை அல்லது தொழில்கள் எதுவாக இருப்பினும் ஒன்றுக்குடனான தொடர்புதான் வளர்ச்சி வேகத்திற்கு உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட நங்கல் தாம் – தால்வாரா ரயில் பாதை திட்டத்திற்காக   40 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறாத நிலையில், தற்போதைய அரசு அதனை சரியான திசையில் செயல்படுத்துவதாகத் குறிப்பிட்டார். இமாச்சலப்பிரதேசம் முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த இரட்டை எந்திர அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம் நாட்டில்  முன்னணி மாநிலங்களில் இமாச்சல் மாநிலமும் ஒன்றாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றும் காலத்திற்கு முன்பே நிறைவேற்றுவது போன்ற புதிய பணி முறையை பிரதமர் சுட்டிக் காட்டினார்.இமாச்சலப் பிரதேசம் அதன் வலிமையின் அடிப்படையில் குறைவாகவும், அதன் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாகவும் மதிப்பிடப்பட்ட முந்தைய காலங்களைப் போலல்லாமல், மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கான நீண்டகால நிலுவையில் உள்ள தேவைகள்  விரைவாக நிறைவேற்றப்படுகிறது என்று தெரிவித்தார். ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் கட்டமைப்புகளுக்கு இமாச்சல் மாநிலம் இரட்டை எந்திர அரசுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது என்று கூறினார். இமாச்சலப்பிரதேசத்தில் கல்வி தொடர்பான முன்னெடுப்புகள் காரணமாக மாணவர்கள் பெரும் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். உனாவில் உள்ள ஐஐஐடி-க்கான நிரந்தர கட்டடம் மூலம், மாணவர்கள் மேலும், பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஐஐஐடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டடத்தை இன்று அர்ப்பணித்தார். நோய்த் தொற்று சவால்களுக்கு இடையே குறித்த காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றியதற்காக அப்பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டினார்.

நாடு முழுவதும் திறன் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்களுக்கான கல்வி நிலையங்களுக்கான தேவை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே நம்முடைய மிகப் பெரிய முன்னுரிமை என்று குறிப்பிட்டார். ராணுவத்தில் பணியாற்றி, நாட்டின் பாதுகாப்பில் புதிய பரிமாணங்களை உருவாக்கிய இமாச்சல பிரதேச இளைஞர்களின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார். “இப்போது அவர்களுடைய பல்வேறு வகையான திறன்கள் அவர்களை இராணுவத்தில் உயர் நிலைகளுக்கு எடுத்துச் செல்ல உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.

தமது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், கனவுகளையும்,  தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கு அதற்கான  முயற்சிகள் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இது போன்ற  முயற்சிகளை இரட்டை எந்திர அரசுகள் மூலம் எங்கும் காணமுடியும் என்று அவர் கூறினார். இது புதிய வரலாறு படைக்கும் என்றும் தெரிவித்தார். இமாச்சலின் வளர்ச்சிக்கான பொற்காலம் விடுதலை அமிர்தப்பெருவிழாவில் தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். பல ஆண்டுகளாக  காத்திருந்த உங்களை இந்தப் பொற்காலம் இமாச்சலப்பிரதேசத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடையச் செய்யும் என்று பிரதமர் நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் இமாச்சலப்பிரதேச  முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்கூர், இமாச்சலப்பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத்  அர்லேக்கர், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பிஜேபி மாநிலத்தலைவர் திரு சுரேஷ் காஷ்யப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****

 

IR/Gee/SM/Sne