Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போபாலில் போர் நினைவிடத்தை பிரதமர் துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

போபாலில் போர் நினைவிடத்தை பிரதமர் துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

போபாலில் போர் நினைவிடத்தை பிரதமர் துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

போபாலில் போர் நினைவிடத்தை பிரதமர் துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்


போபாலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். அங்கு போர் நினைவிடத்தை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டத்தில் ஏராளமான முன்னாள் படைவீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் வீரர்கள் மனிதாபிமானத்திற்கான அடையாளம் என பிரதமர் கூறினார். இயற்கை பேரழிவு நிகழ்கின்றபோது இந்திய ஆயதப் படைகளின் வீரர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஒழுக்கம் மற்றும் நடத்தை அளவுகோல்களில், இந்திய ஆயதப் படைகள் உலகில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா உலக அளவில் அமைதிப்படைகளில் முதன்மையாக பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் ஏமெனில் ஏற்பட்ட சிக்கலின்போது, இந்திய ஆயுதப் படைகள், ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்களை மட்டுமல்லாமல், பிற நாடுகளின் குடிமக்களையும் வெளியேற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியர்கள் பிற நாட்டு எல்லைகளின் மீது பற்று கொள்ளாதவர்கள் என்ற போதும், மனித மாண்புகளை காக்க வேண்டிய தருணம் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள இந்திய ஆயுதப் படைகள் ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உலக போர்கள் இந்தியாவின் போர்கள் அல்ல என நினைவு கூர்ந்த பிரதமர், இருப்பினும் அந்நிய நாடுகளை பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் தங்களது உயிர்களை தியாகம் புரிந்துள்ளனர் என்றார். வீரர்கள் புரிந்த இத்தகைய தியாகங்களை நாம் மட்டும் மறக்காமல் இருப்பதோடு, உலகமும் அதனை மறக்காமல் பார்த்துக் கொள்ள நாம் உறுதி செய்ய வேண்டும. 125 கோடி இந்தியர்களின் ஆதரவை பெற்றுள்ள அதன் வீரர்களே இந்திய ஆயுதப் படைகளின் நம்பிக்கை ஆகும்,

சுதந்திரத்தின் விலை தொடர் கண்காணித்தல் என்ற பிரதமர், நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தை பாராட்டினார்.

இந்திய ஆயுதப் படைகளின் தியாக பராம்பரியத்தை பாராட்டி இந்தி கவிஞர்கள் மக்கன்லால் சதுர்வேதி மற்றும் ராம்தாரி சிங் கூறிய வரிகள் சிலவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு, முன்னாள் படைவீரர்களுக்கு ஒரு பதவி நிலை, ஒரு ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த பிரதமர் முன்னாள் இராணுவத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு இதர நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

***