Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் மொதேராவில் உள்ள சூரிய ஆலயத்திற்குப் பிரதமர் சென்றிருந்தார்

குஜராத்தின் மொதேராவில் உள்ள சூரிய ஆலயத்திற்குப் பிரதமர் சென்றிருந்தார்


குஜராத்தின் மொதேராவில் உள்ள சூரிய ஆலயத்திற்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சென்றிருந்தார். பிரதமர் வருகையையொட்டி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சூரிய ஆலயத்தில் சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் இந்தியாவின் முதல் பாரம்பரிய விளக்குகளை திரு மோடி தொடங்கிவைத்தார். மோதேரா சூரியன் கோவிலின் முப்பரிமாண  திட்ட வரைபடத்தையும் அவர் திறந்து வைத்தார். கோயிலின் வரலாற்றை விளக்கும் கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமர் பயணத்தின்போது  குஜராத் முதலமைச்சர் திரு  பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல், குஜராத் அமைச்சர்கள் திரு புர்னேஷ்பாய் மோடி, திரு அர்விந்த்பாய் ரயானி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, குஜராத்தில் உள்ள மோதேரா, மெஹ்சானாவில் ரூ. 3900 கோடி  மதிப்பிலான பல திட்டங்களுக்குப்  பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார் மற்றும் அர்ப்பணித்தார். 24×7 சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல்  கிராமமாக மோதேராவைப்  பிரதமர் அறிவித்தார். குஜராத்தின் மோதேராவில் உள்ள மோதேஸ்வரி மாதா கோயிலிலும் திரு மோடி தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

*****