20.09.2022 அன்று நடைபெற்ற பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடிதலைமை வகித்தார்.
4345 குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் உட்பட, பிஎம் கேர்ஸ் நிதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் பிஎம் கேர்ஸ் நிதி ஆற்றிய பங்கை உறுப்பினர்கள் பாராட்டினர். பிஎம் கேர்ஸ் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையானது, நிவாரண உதவிகள் மூலம் மட்டுமின்றி, துயர்தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், அவசரநிலை மற்றும் இடர்பாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப திறம்பட செயல்படும் நீண்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையில் இணைந்த உறுப்பினர்களை பிரதமர் வரவேற்றார்.
கூட்டத்தில் பிஎம் கேர்ஸ் நிதியின் உறுப்பினர்கள், அதாவது மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்:
பிஎம் கேர்ஸ் நிதியின் ஆலோசனை குழுவுக்கு பின்வரும் பிரபல பிரமுகர்களை நியமிக்க அறக்கட்டளை தீர்மானித்துள்ளது:
புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்புடன் பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மேலும் விரிவான நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படும் என்று பிரதமர் கூறினார். பொது வாழ்க்கையில் அவர்களது நீண்ட கால அனுபவம், பொது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதில், மேலும் வீரியத்துடன் நிதி வழங்க வகைசெய்யும்.
**************