Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீக்கிய சமுதாய பிரதிநிதிகளை பிரதமர் இன்று தமது இல்லத்தில் சந்தித்தார்

சீக்கிய சமுதாய பிரதிநிதிகளை பிரதமர்  இன்று தமது இல்லத்தில் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயப் பிரதிநிதிகளை தமது இல்லம் அமைந்துள்ள நெ.7 லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தார்.

பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி, தில்லி குருத்வாரா ஸ்ரீ பால சாஹேப் அவர்கள் அகண்ட்  பாத் எனும் குரு கிரந்த் சாஹேபை இடைவிடாது வாசிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரதமரின் பிறந்த தினம் செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்பட்டதையொட்டி, அகண்ட் பாத் நிகழ்ச்சி, செப்டம்பர் 15ம் தேதி தொடங்கியது. பிரதமரை சந்தித்த சீக்கிய பிரதிநிதிகள் குருத்வாராவின் பிரசாதங்களை வழங்கி ஆசீர்வாதத்தை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது பிரதமருக்கு பக்டி கட்டி, சிரோப்பா அளித்து சீக்கிய பிரதிநிதிகள் கவுரவித்தனர். பிரதமரின் நீண்ட ஆயுள்  மற்றும் உடல் நலத்திற்காக அர்தாஸ் எனும் பிரார்த்தனை நடைபெற்றது. டிசம்பர் 26-ம் நாளை  வீர் பால் தினமாக அறிவித்தது, கர்தார்ப்பூர் சாஹிப் முனையத்தை மீண்டும் திறந்தது.   குருத்வாரா நடத்தி வரும் சமுதாய உணவுக்கூடத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி நீக்கப்பட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்து  குரு கிரந்த் சாஹிபை இந்தியாவிற்கு கொண்டுவருவதை உறுதி செய்தது உள்ளிட்ட பிரதமரின் பல்வேறு முயற்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

பிரதமருடனான இந்த சந்திப்பில் அகில இந்திய கேந்திரிய குரு சிங் சபா தலைவர் திரு தர்விந்தர் சிங் மர்வா, செயல் தலைவர் திரு வீர் சிங், கேந்திரிய குரு சிங் சபா தில்லி தலைவர்  திரு நவீன் சிங் பண்டாரி. திலக் நகர் குருத்வாரா சிங் சபா தலைவர் திரு ஹர்பன்ஸ் சிங், குருத்வாரா சிங் சபா கிரந்தியின் தலைவர் திரு ராஜீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

************** 

(Release ID: 1860550)