Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துருக்கி அதிபர் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு

துருக்கி அதிபர் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு


சமர்க்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இடையே துருக்கி அதிபர் திரு ரெசெப் தையிப் எர்டோகனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இரு தலைவர்களும் இந்தியா – துருக்கி இடையிலான உறவுகளை ஆய்வு செய்தனர். பொருளாதார உறவுகளில், குறிப்பாக இருதரப்பு வர்த்தகத்தில் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், பொருளாதார மற்றும் வணிக இணைப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சி பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இருதரப்பு விவகாரங்களில் மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் நலனுக்காகவும் வழக்கமான தொடர்புகளைப் பேண இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

********